எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தனியார் பஸ் சேவையில் 50 சதவீத பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிக பயணிகளை பஸ்ஸில் ஏற்ற வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க இன்னும் அனுமதி வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எனவே இதற்கான அனுமதியை கோரும் வகையில் 50 சதவீத பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தாமலிருக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.







