விளம்பரத்தில் பளபளக்கும் நயன்தாரா.!

துணை நடிகை முதல், முன்னணி நடிகை வரை ஊரடங்கு காலத்தில், பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒருசிலருக்கு நடிப்பின் மூலம் வரும் வருமானம் பாதிக்கப்படுகிறது என்றால், மற்றொரு தரப்பினரோ கேமரா முன்பு நிற்காமல் இருப்பதே அவர்களுக்கு ஒரு வித மன அழுத்தத்தை கொண்டு வந்து விடும் போல. நமது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் அதே நிலைமைதான்.

தமிழில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கூட, விடுப்பு எடுத்தது போதும் என்று தோன்றி விட்டது போல. எனவே, வருமானத்திற்கும், மன அழுத்தத்தை குறைக்கவும் ஊரடங்கு சமயத்தில் விளம்பர படங்களில் நடிக்க அவர் களமிறங்கி விட்டார். தற்போது, அவர் ஆடைகளுக்கு நறுமணம் வீசக்கூடிய லிக்யூடு ஒன்றின் விளம்பரத்திற்காக நடித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் நடித்துள்ள நயன்தாரா, தங்க நிற ஜரிகை வைத்த கருப்பு கலர் புடவையில், பளபளப்புடன் பார்க்கவே கொள்ளை அழகாக தோன்றுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும், “ரெக்க மட்டும் இருந்தா, என் ஆளு தேவதை சார்.” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.