அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
ஆனால் தற்போது தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
இவர் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் ஸ்பைடர், சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தீர்ன், தேவ் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்திலும் மற்றும் சிவகார்த்திகேயனின் ரவிகுமார் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் அயலான் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்தும் காதல் மற்றும் வருங்கால கணவர் குறித்தும் தெரிவித்துள்ளார்.
இதில் அவர் குறியது : காதல் திருமணம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு வரும் கணவர் என்னைவிட உயரமாகவும் நல்ல புத்திசாலியாகவும், வாழ்க்கையில் ஒரு லட்சியத்துடன் இருக்க வேண்டும் என தனது கண்டிஷங்களை கூறினார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.