நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனின் கொரோனா டெஸ்ட் முடிவுகள்

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அமிதாப் பச்சன். பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர்.

இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நலம் சரியாக இல்லை என்பதால் கொரோனா வைரஸ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது இவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டதை தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

மேலும் அவருடன் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களையும் டெஸ்ட் செய்ய அறிவுறுத்தி இருந்தார்.

இதனிடையே அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரின் மகன் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜெயா பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் இருவருக்கும் கொரோனா முடிவு நெகடிவ் என வந்துள்ளதாக கூறபடுகிறது.