எனது உடலமைப்பை கேலி செய்கிறார்! மீண்டும் வெடித்த வனிதாவின் திருமண பிரச்சினை….!

நடிகை வனிதா தன்னுடைய உடலமைப் வைத்து பாடி ஷேமிங் செய்ததாக பிரபல தயாரிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

பீட்டர் பாலுடனான வனிதாவின் மூன்றாவது திருமணத்தை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். தன்னுடைய திருமணம் பற்றி பேசிய அனைவரையும் வனிதா விளாசி தள்ளினார்.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர், பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக பேசினார். வனிதா சட்டப்படி திருமணம் செய்யவில்லை.

இதனால் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக தான் நிற்கபோவதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வனிதா, தயாரிப்பாளர் ரவீந்திரனை கடுமையாக சாடினார். அதோடு தனது தனிப்பட்ட விஷயம் குறித்து பேசிய ரவீந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என போனில் மிரட்டினார்.

அந்த ஆடியோக்கள் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை வனிதா தனது உடலமைப்பை வைத்து தன்னை கேலி செய்ததாக ரவீந்திரன் கூறியுள்ளார்.

இதற்காக வனிதா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். தான் வனிதாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ள ரவீந்திரன், ஹெலனுக்கு ஆதரவாக நிற்கபோவதாகவும், வனிதா சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் என்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியுள்ளார்.

இதனிடையே தனது பதிவு திருமணத்திற்கான மோதிரங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த வனிதா, எங்களின் காதல் எப்போதும் குறையாது. எங்களின் கடைசி மூச்சு வரை இந்த காதல் தொடரும். சட்டமோ அல்லது டிராமா ட்ரூப்போ ஒன்னும் செய்ய முடியாது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.