சுஷாந்த் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் நடிப்பில் வெளிவந்த தோனி படம் அவரை இந்தியா முழுவதும் மிகப்பெரிய நடிகராக உருவாக்கியது.
ஆனால், மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தகவல் ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதை தொடர்ந்து தற்போது கன்னட சீரியல் நடிகர் சுஷில் கவுடா தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த தகவல் கன்னட திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், அவருடைய வீட்டிலேயே சுஷில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அவருடைய உடலை போலிஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அதை வைத்தே அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கும் என கூறப்படுகிறது.
மேலும், அவரின் தற்கொலைக்கு சரியான காரணங்கள் எதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.