கடந்த மூன்று மாதங்களாக திரையுலகில் எந்த ஒரு படப்பிடிப்புகள் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் !

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையுலகில் எந்த ஒரு படப்பிடிப்புகள் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்கிறோம் என பிரபல நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், மகத், நடிகை ஆர்த்தி, இயக்குனர் ஹரி உட்பட பல நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் அறிவித்துள்ளார்கள்.

அந்த தமிழ், தெலுங்கு என் இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

இவர் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் ஸ்பைடர், சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தீர்ன், தேவ் உட்பட பல படங்களில் நடித்த தற்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்திலும் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் ரகுல் ப்ரீத்திசிங் தனது சம்பளத்தை 50%, அதாவது பாதியாக குறைத்துள்ளார்.

இதுவரை அவர் ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வந்ததாகவும், தற்போது அவர் ரூ.75 லட்சத்திற்கு நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரகுல் ப்ரீத்திசிங் போலவே முன்னணி நட்சத்திரங்கள் தாங்களாகவே முன்வந்து சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பதே தயாரிப்பாளர்களின் மாபெரும் ஒரு கோரிக்கையாக இருக்கிறது. அப்போது தான் இந்த மிக பெரிய வீழ்ச்சியில் இருந்து தமிழ் திரையுலகம் கூடிய விரைவில் மீளும்.

மேலும் எந்த ஒரு முன்னணி நடிகர்கள் செய்த ஒரு விஷயத்தை ரகுல் ப்ரீத் சிங் செய்ததால், தற்போது இந்த செய்தி பெரிதளவில் பரவி வருகிறது.