தளபதி விஜய் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல், அதிர்ச்சியில் கோலிவுட்…!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என அங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

சென்ற வருடம் வெளியான இவரின் பிகில் திரைப்படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மொழி மாநிலங்களிலும் வசூலை வாரி குவித்தது.

இவரின் அடுத்த திரைப்படமும் இதேபோல் அங்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தும் என நம்ப படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் வீட்டிற்கு யாரோ வெடிக்குண்டு மிரட்டல் விடுத்துள்ளார்களாம்.

இதை தொடர்ந்து போலிஸார் இதுக்குறித்து விசாரிக்க, விழுப்புரம் பகுதியில் இருந்து யாரோ இப்படி செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.