மட்டக்களப்பிற்கு திடீரென விஜயம் செய்துள்ள பிக்குகள்!

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே அறிவித்து இருக்கிறார்.

இந்த ஜனாதிபதி செயலணிக்கு பௌத்த மதம் சார்ந்த பிக்குகள் , இராணுவ அதிகாரி ,வர்த்தகர், மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படியொரு ஆபத்தான நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்திலுள்ள வேத்துச்சேனை தமிழ்கிராமத்திற்கு இன்று பிக்குகள் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்தனர்.

இதேவேளை வெல்லாவெளி வேத்துசேனையில் கடந்த மாதம் தனியார் காணி யை (விளையாட்டு மைதானம்) அந்த காணி தொல்பொருள் உரிய இடம் யாரும் அங்கு போக கூடாது என்று பொலிசார் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று பிக்குகள் மற்றும் இராணுவத்துடன் சிங்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.