நாவற்பழத்தை சாப்பிட்டால் ஏற்படும் நன்மை…!!

நாவல் பழம் வயிறு தொடர்பான பல கோளாறுகளைத் தீர்க்கக்கூடியது. வாயுத் தொல்லைகள், சிறுநீர்த்தேக்கம், சீத ரத்த பேதியை நிறுத்தக்கூடியது. நாவல் மரப்பட்டை மற்றும் விதைகளுக்கு பேதியை நிறுத்தும் ஆற்றல் உண்டு. எருக்கட்டு அதாவது மலச்சிக்கல், கணையம் சம்பந்தமான நோய்கள், வயிற்றில் ஏற்படும் காற்று மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றையும் குணமாக்கும் தன்மை நாவலில் எல்லா பாகங்களுக்கும் இருக்கிறது..

நாவல் விதைகளைப் பொடித்து அதினின்று பெறப்பட்ட பொடியை தினம் 2 வேளை 1 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவு குறைகிறது. நாவல் இலை துவர்ப்புத் தன்மை உடையது. நாவல் இலையை கொழுந்தாகத் தேர்ந்தெடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதோடு ஒரு ஏலக்காய், சிறிதளவு இலவங்கப்பட்டை தூள் ஆகியன சேர்த்து காலை மாலை என இரண்டு வேளைகள் உள்ளுக்குக் கொடுத்து வர அஜீரணம், வயிற்றுப்போக்கு முதலியன குணமாகும்.

நாவல்பழச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் மற்றும் நெல்லிச்சாறு இவை இரண்டையும் சம அளவாகச் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடல் சோர்வு, ரத்த சோகை குணமாகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். நாவல் இலைக்கொழுந்து, மாவிலைக் கொழுந்து, இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து புளிப்பில்லாத தயிரில் கலந்து உள்ளுக்குக்கொடுப்பதால் சீதபேதி, ரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு மற்றும் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

நாவல் மரப்பட்டையைத் தூள் செய்து நீரில் இட்டு கொதிக்கவைத்து வாய்க் கொப்பளிப்பதால் வாயில் ஏற்பட்ட புண்கள், பல் சொத்தை, ஈறுகளின் வீக்கம் ஆகியவை குணமாகும். நாவல் விதை சூரணத்தோடு மாம்பருப்பு சூரணமும் சம அளவு சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர சிறுநீரைப் பெருக்கும்.

பெண்கள் மலட்டுத்தன்மை குணமாக நாவல் மரத்தின் கொழுந்து இலையை கசாயமிட்டு 60 மிலி கசாயத்துடன் 1 டீஸ்பூன் தேன்சேர்த்து அருந்திவர மலட்டுபுழு குணமாகும். நாவல் வேர் ஊறிய நீரானது கழிச்சல் நீரிழிவை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும்.