உயர்வை சந்திக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலையில்லாமல் உயர்வையும், குறைவையும் சந்தித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மேலும், விலை உயரும் போது ரூபாய் கணக்கிலும், குறையும் போது பைசா கணக்கிலும் குறைந்து வருகிறது.

கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் பெட்ரோல் டீசலின் விலையை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், உலகை ஆட்டி வைத்து வரும் கரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக அணைத்து நாடுகளும் பொருளாதார ரீதியிலான பிரச்சனையை சந்தித்துள்ளது.

மேலும், உலக கச்சா எண்ணெய் வர்த்தகமும் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்தனர். இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் பொருட்களை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.83.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ.77.82க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 0.04 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 0.11 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.