தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா.?

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது சில மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது தெரியவரும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஐந்தாம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர் அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.