தொலைபேசி பாவிப்பதை கண்டித்ததால் ஆத்திரம்.. 21 வயது கல்லூரி மாணவியின் விபரீத முடிவு.!!

தமிழகத்தின் சென்னையில் உள்ள மடிப்பாக்கம் துரைராஜ் தெரு பகுதியை சார்ந்தவர் மதுமிதா (வயது 21). இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வரும் நிலையில், மதுமிதா மற்றும் அவரது தம்பியை தாய்மாமன் சரவணன் என்பவர் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், மதுமிதா எந்த நேரத்திலும் அலைபேசியும் கையுமாக இருந்து வந்துள்ளார். இதனைக்கண்ட சரவணன் மதுமிதாவை கண்டித்த நிலையில், அவர் கேட்டதாக தெரியவில்லை. இதனால் அலைபேசியை சரவணன் பறித்து வைத்துள்ளார்.

இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளான மதுமிதா, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மடிப்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மதுமிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அலைபேசி உபயோகம் செய்ததை கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.