இஸ்ரேல் தலைநகர் டெவ் அவிவ் நகரில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் கண்காணிப்பாளர்களின் உத்தியோகபூர்வ வாகனத்தில் ஜோடியொன்று பாலுறவு கொண்ட வீடியோ வெளியானது, ஐ.நாவை சங்கடப்படுத்தியுள்ளது.
18 விநாடிகளை கொண்ட அந்த வீடியோ ருவிற்றரில் வெளியானது. கனடாவை சேர்ந்த பெண்ணொருவர் அதை வெளியிட்டிருந்தார்.
ஐ.நாவின் பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற உத்தியோகபூர்வ வாகனத்தின் பின் ஆசனத்தில் ஆணொருவரும், பெண்ணொருவரும் பாலறவு கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது. அவர்களின் முன் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பவர் அசந்து தூங்கிக் கொண்டிருப்பதை போல தென்பட்டது. வாகனத்தை சாரதி செலுத்திக் கொண்டிருந்தார்.
உயரமான இடமொன்றில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
காரில் இருப்பவர்கள் அனைவரும் ஜெருசலேமை தளமாகக் கொண்ட ஐ.நா அமைதி காக்கும் யுஎன்டிஎஸ்ஓ அமைப்பை சேர்ந்தவர்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்ரோயோ குட்ரெஸின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், வீடியோவை பார்த்து அதிர்ச்சியும் ஆழ்ந்த மன உளைச்சலும் அடைகிறோம். இது வெறுக்கத்தக்க நடத்தை. கடமை, பொறுப்பிற்கு எதிராக அவர்கள் செயற்பட்டுள்ளனர். விசாரணை ‘மிக விரைவில்’ முடிவடையும் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஜோடி அடையாளம் காணப்படுவதற்கு நெருக்கமான கட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஐ.நா அமைதி காக்கும் படையணி குறித்த சர்ச்சைகள் உள்ளது. கரீபியன் தீவின் 11 வயது சிறுமியொருவர் கர்ப்பிணியானது, மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உணவிற்காக பாலியல் இலஞ்சம் வழங்குவது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஐ.நா அமைதிப்படையணிகள் மீது உள்ள நிலையில், இந்த வீடியோ ஐ.நாவை மேலும் சங்கடப்படுத்தியுள்ளது.
I present to you…..the UN pic.twitter.com/7bqw2fzVZa
— Mattea Merta ?? (@MatteaMerta) June 25, 2020