தினமும் முட்டை சாப்பிடலாமா?

பல்வேறு விவாதங்களின் மையப்பொருளாக முட்டை இருந்திருக்கிறது. சிலர் மஞ்சள் கருவை தவிர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்றும், சிலர் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று கூறுகின்றனர்.

பல்வேறு விவாதங்களின் முடிவுக்கு பின்னர், நாம் அறிந்து கொள்வது மஞ்சள் கரு தொடர்ந்து உட்கொள்ளக் கூடாது. இதனால் கொழுப்பின் அளவு அதிகரித்து, இதய நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.

முட்டையில் அதிகப்படியான டயட்டரி கொழுப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு முட்டையில் 185 மி.கி அளவிற்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் கொழுப்பின் அளவின் அதிகரிப்பது, உணவில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பே(saturated fat) ஆகும். உணவில் இருக்கும் சாதாரண கொழுப்பால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், அதிலிருக்கும் கொழுப்பு பிரிந்து முழு மூலக்கூறாக உட்கிரகிக்கப்படாது. அதேசமயம் நிறைவுற்ற கொழுப்பு(saturated fat) சிறிய, சிறிய கொழுப்பு அமிலங்களாக பிரிந்து, உடல் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கும், ஒரு நாளிற்கு ஒரு முட்டை உண்பதற்கும் இடையேயான தொடர்பை, ஆராய்ச்சிகளும், படிப்பினைகளும் கண்டறிய தவறிவிட்டன. இதில் மரபியல் ரீதியாக இதய பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளவர்களும் விதிவிலக்கல்ல.