பேஸ்புக்கில் கூகுள் தேடலுக்கு இணையான வசதி

இணைய ஜாம்பவான் ஆன கூகுளின் தேடற்பொறியில் எந்தவொரு விடயத்தினையும் தேடிப்பெற்றுக்காள்ளக்கூடிய வசதி தரப்பட்டுள்ளமை தெரிந்ததே.

அதேபோன்று பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கிலும் தேடல் வசதி தரப்பட்டிருக்கின்றது.

எனினும் இவ் இரு தேடல்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அதாவது பேஸ்புக்கில் பொதுவாக வழங்கப்பட்டுள்ள தகவல்களை மாத்திரமே தேடிப்பெற்றுக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது.

அத்துடன் பேஸ்புக் சார்ந்த தகவல்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூகுள் தேடலில் கிடைக்கக்கூடிய பெறுபேறுகளைப் போன்று அனைத்து தகவல்களையும் தேடக்கூடிய வசதியினை விரைவில் பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.