என்ன இப்படி டிரஸ் பண்ணி இருக்கீங்க!..

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்களில் லொஸ்லியாவும் ஒருவர்.

ரசிகர்கள் பட்டாளமும் அதிகரிக்க தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட அப்படத்தின் பர்ஸட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கதாநாயகியான கையோடு உடற்பயிற்சி செய்து வரும் லொஸ்லியா எடையை குறைத்து ஸ்லிம்மாகி விட்டார்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில் இவர் எப்போதோ வெளியிட்ட படத்தை தூசுதட்டி எடுத்த நெட்டிசன்கள், என்ன கண்றாவி டிரஸ் இது? இப்படியெல்லாம் டிரஸ் போடாதீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த புகைப்படத்தில் லொஸ்லியா வெள்ளை நிற உடை அணிந்து அழகாக இருக்கிறார். அவர் முழங்காலுக்கு மேல் உடை அணிந்திருப்பது தான் சமூக வலைதளவாசிகளுக்கு பிரச்சனையாம்.

எப்பொழுதும் ஹோம்லியாக உடை அணியும் லொஸ்லியா போய் இப்படி குட்டி டிரெஸ் போடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அப்படி என்றால் படத்திலும் கவர்ச்சி காட்ட தயங்க மாட்டாரா என்று தெரிவித்துள்ளனர்.

என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரது உரிமை, வெள்ளை நிற உடை ஒன்றும் ஆபாசமாக இல்லை. சும்மா விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அவரை விளாச வேண்டாம் என்று லொஸ்லியாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.