சமீபத்தில் தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கலாம் என உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து பல சீரியல்கள் தங்களது வேலைகளை துவங்கியுள்ளது.
இந்நிலையில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பும் தற்போது துவங்கியுள்ளது.
ஆம் இதனை ஏற்கனவே ஜி தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், தற்போது செம்பருத்தி சீரியல் நடிகை { பார்வதி } என்று அழைக்கப்படும் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ” படப்பிடிப்பு துவங்கிவிட்டது, கூடிய விரைவில் உங்களை சந்திக்க வருகிறோம் ” என பதிவிட்டுள்ளார் நடிகை ஷபானா. இதனால் சரிந்துள்ள ஜி தமிழ் தொலைக்காட்சியின் TRP கண்டிப்பாக எகுறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.








