தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்..!!

இந்திய சினிமாவிற்கு இது போதாத காலம் போல. ஏற்கனவே இர்பான் கான், ரிஷ் கபூர் ஆகியோரை இந்த வருடம் இழந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகர் சிரஞ்சீவி இறந்தார். இதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஒளிப்பதிவாளர் கண்ணன் இறந்துள்ளார்.

இது ஒட்டு மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று மாரடைப்பால் இவர் இறந்துள்ளார்.

இவர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, கைதியின் டைரி, கடல் பூக்கள் என பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.