பிக்பாஸில் ஆரம்பத்தில் இருந்த ஷெரினா இது என கேட்கும் அளவுக்கு படு ஒல்லியாக ஸ்டைலாக மாறியுள்ளார் ஷெரின்.
கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை வாயிலாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ஷெரின்.
பின்னர் விசில் படம் மூலம் அழகிய அசுராவாக மாறி ரசிகர்களை இன்னும் கிரங்கடித்துக் கொண்டிருக்கிறார்.
அதன்பின்னர் சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையாததால் சற்று ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
குண்டு பெண்ணாக இருந்த ஷெரின் இளம் வயது அழகிகளுக்கே சவால் விடும் வகையில் சூப்பராக மாறியிருக்கிறார்.
தற்போது வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.









