கிருஷ்ணகிரிக்குள் வந்த வெட்டுக்கிளி.. அதிர்ச்சியில் விவசாயிகள்.!!

பாலைவனத்தில் இருந்து இரைதேடி வரும் வெட்டுக்கிளிகள் பச்சை பசுமையான வயல் வெளி மற்றும் மரங்களை சாப்பிட்டு, பாக்கிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் வந்துள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரும் சேதத்தை வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் தாக்கம் தமிழகத்திற்கு வராது என்று அறிவிப்புகள் வெளியான நிலையில், மஹாராஷ்டிராவில் நேற்று முன்தினம் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு துவங்கியதாக தகவல் வெளியானது.

இந்த சமயத்தில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கம் துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வெட்டுக்கிளிகள் எருக்களை செடிகளை குறிவைத்து சாப்பிடும் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக தலைமை செயலகத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு வேளாண்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளிகள் தாக்கத்தில் இருந்து தமிழகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.