கோடைக்காலம் வந்து விட்டாலே உணவுப்பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் மற்ற காலங்களை தவிர, கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கி கொள்ளவே முடியாது.
குறிப்பாக வெயில் காலத்தில் சாதாரணமாகவே உடல் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும். ஆகவே, அப்போது சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வெயில் காலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?
கார உணவுகளை கோடைக்காலத்தில் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, பட்டை போன்ற உணவிற்கு காரத்தை தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.
அசைவ உணவுகளை கோடைக்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்” உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பண்டங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.







