சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, ஆர். பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோதிகா, ”கதாநாயகியை மையமாகக் கொண்ட பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதன் மூலமாக 200 நாடுகள் வரை சென்றடைய முடிகிறது.
தொழில்நுட்பத்தின் துணை இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. நிலைமையை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.







