Zoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி??

தற்போதுள்ள லொக்டவுன் நிலைமை காரணமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு Zoom அப்பிளிக்கேஷன் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ள பல்வேறு வசதிகளே இதற்கு காரணம் ஆகும்.

இவற்றில் ஆடியோவை மியூட் செய்தல் மற்றும் வீடியோ காட்சிப்படுத்தப்படுவதை நிறுத்துதல் போன்ற வசதிகளும் உள்ளடங்கும்.

கொன்பரன்ஸ் மீட்டிங் ஒன்றில் இருக்கும்போது தேவைக்கு ஏற்றாற்போல் மேற்கண்ட வசதிகளைப் பயன்படுத்த முடியும்.

ஆடியோவை மியூட் செய்வதற்கு Settings பகுதிக்கு சென்று Audio என்பதை தெரிவு செய்து Mute microphone when joining a meeting என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதேபோன்று வீடியோவினை நிறுத்துவதற்கு Settings சென்று Video என்பதை தெரிவு செய்து Turn off my video when joining a meeting என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.