கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்பரில்லா. இவர் ஐரா படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கேப்பரில்லா கருபழகி தியேட்டர் ஃபேக்டரி என்ற நாடக குழுவை தொடங்கியுள்ளாராம்.
படங்களில் நடிப்பதற்கு முன் மைம் கலைஞராக இருந்த அவர் மாணவர்களுக்கு நடிப்பை சொல்லிக்கொடுக்க ஒரு நாடக குழுவை தொடங்க ஆசைப்பட்டாராம்.
அதன் விளைவாக கருபழகி தியேட்டர் உருவாகியுள்ளதாம். ஊரடங்கிற்கு பின் அவர் அதிக மைம் வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். மாநிலம் முழுக்க ஷோ நடத்த திட்டமிட்டுள்ளாராம்.