தமிழ் சினிமாவை பார்த்து காப்பியடித்து படங்களை எடுத்த ஹாலிவுட் சினிமா.!

தமிழ் திரையுலகம் பல முறை ஹாலிவுட் மற்றும் கொரியன் திரையுலகில் வெளிவந்த படங்களை பார்த்து காப்பியடித்து படங்களை எடுத்துள்ளனர்.

ஆனால் நம் தமிழ் திரையுலகில் வெளிவந்த படங்களை பார்த்து கூட ஹாலிவுட்டில் பல திரைப்படங்களை எடுத்துள்ளனர்.

1. அவதார் = இப்படம் பிரமாண்டமாக இருந்தால் கூட, இப்படத்தின் கதை தமிழில் பிரபு நடித்து வெளிவந்த வியட்நாம் காலனி படத்தின் கதை தான்.

2. Saving Private Ryan = இப்படத்தின் கதை நடிகர் அருண் பாண்டியன் மற்றும் ராம்கி நடித்து வெளிவந்த இணைந்த கைகள் படத்தின் கதை தான்.

இதேபோல் கமல் ஹாசன் நடித்து வெளிவந்த சிப்பிக்குள் முத்து, மகாநதி, ஆளவந்தான், உத்தம வில்லன், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களையும் ஹாலிவுட் சினிமா காப்பியடித்து எடுத்துள்ளார்களா என எண்ண தோன்றுகிறது.

இவை வெறும் நாம் ஒரே கதையில் அமைந்த படங்களை தான் கூறியுள்ளோம், இந்த படங்களை எல்லாம் அந்த ஹாலிவுட் கலைஞர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை, இப்படி உங்களுக்கு தெரிந்த படங்களை கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்.