காதலியுடன் ஒரே அறையில் பிணமாக கிடந்த முக்கிய நடிகர்!

காதல் வலையில் சிக்கி பலரும் தவிப்பதை காணமுடிகிறது. சிலர் மட்டுமே காதல் வாழ்க்கையில் வெற்றி கொள்கிறார்கள். சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெறத்தான் செய்கின்றன.

தற்போது அபோகலிப்டா என்ற திகில் படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்தவர் கிரிகாரி டைரி பாய்ஸ்.

நிறைய படங்களில் நடித்துள்ள இவர் தன் காதலி நடாலியாவுடன் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வசித்து வந்தார். அடிக்கடி தன் அம்மாவுக்கு போன் செய்து பேசும் அவர் கடந்த சில நாட்களாக போன் செய்யவே இல்லையாம்.

இதனால் சந்தேகமடைந்த அவரின் அம்மா வீட்டிற்கு சென்ற பார்த்தபோது மகன் கிரிகாரியும் நடாலியாவும் ஒரே அறையில் பிணமாக கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.

போலிஸ் விசாரணையில் கடைசியாக அன்னையர் தினம் அன்று கிரிகாரி தன்னை சந்தித்து வாழ்த்து பெற்று சென்ற மகனை தற்போது இழந்து தவிக்கிறேனே கூறி அவரின் தாய் கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் கிரிகாரி, நடாலியா மரணம் தற்கொலை செய்துகொண்டார்களா? அவரது மரணத்தின் பின் வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என விசாரித்து வருகிறார்களாம்.

கிரிகாரிக்கு வயது 30, அவரின் காதலிக்கு வயது 27 ஆகிறதாம்.

இம்மரணம் ஹாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியாக்கியுள்ளது.