அசுரன் நடிகையின் அழகான வீடியோ!

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பலராலும் அதிகம் பாராட்டப்பட்ட படம் அசுரன். தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் இப்படத்தில் நடித்திருந்தார்.

இருவரின் நடிப்பில் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. மஞ்சு வாரியர் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

சில படங்களில் கமிட்டாகியுள்ள மஞ்சு வாரியார் தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாமல் இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கிறார்.

தற்போது அவர் வீட்டில் இருந்தபடி அழகாக வீணை வாசித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.