வாட்ஸ் ஆப் மூலம் அழைப்புக்களை மேற்கொள்வது எப்படி?

உலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வாட்ஸ் ஆப் ஆப்பிளிக்கேஷனை விண்டோஸ் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வசதி ஏற்கணவே தரப்பட்டுள்ளது.

எனினும் கோப்புக்களை பரிமாறல் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புதல் போன்றவற்றினை மாத்திரமே மேற்கொள்ள முடியும்.

மொபைல் சாதனங்களின் ஊடாக மாத்திரமே வீடியோ மற்றும் குரல்வழி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.

எனினும் விண்டோஸ் கணினிகளிலும் வீடியோ மற்றும் குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான வழிமுறை ஒன்று உள்ளது.

இதற்கு மிகவும் நம்பிக்கையான Android Emulator மென்பொருளை முதலில் நிறுவ வேண்டும்.

கூகுளில் தேடி இவ்வாறான மென்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதன் பின்னர் குறித்த Android Emulator மென்பொருளை செயற்படச் செய்து அதன் ஊடாக பிந்தைய வாட்ஸ் ஆப் பதிப்பிற்கான APK கோப்புக்களை தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.

அதன் பின்னர் மொபைல் இலக்கம் உட்பட அனைத்து அனுமதிகளையும் வழங்கி வாட்ஸ் ஆப்பினை செயற்படுத்த வேண்டும்.

தற்போது வீடியோ அழைப்புக்கான வசதி தரப்பட்டிருப்பதை காணலாம்.

எச்சரிக்கை: Android Emulator மென்பொருட்கள் மூன்றாம் தரப்பு மென்பொருட்கள் ஆகும். எனவே கண்டிப்பாக நம்பிக்கையான மென்பொருளை தெரிந்தெடுத்து நிறுவ வேண்டும்.

Android Studio’s emulator, ARChon, Bliss OS, Bluestacks போன்றன சில Android Emulator மென்பொருட்களாகும்.