அமெரிக்காவில் ஒரே நாளில் 2,671 பேர் பலி.!!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,10,537ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,75,959ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,82,344ஆக உயர்வு

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 40,10,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரசால் 2,75,959 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 13,82,344 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 13,21,666 பேருக்கு கொரோனா வைரஸால் பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 29,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று நேற்று ஒரே நாளில் 2,671 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 78,599 ஆக அதிகரித்துள்ளது.