மில்லியன் பார்வையாளர்களின் இதயத்தினை வென்ற குரங்கின் அழகிய சிரிப்பு!

குரங்கு ஒன்று ஒரு புன்னகையால் இணையத்தில் அனைவரது மனங்களையும் வென்று வருகின்றது.

உணவு பெற்று கொண்ட குரங்கு ஒன்று புண்ணகையுடன் நன்றி தெரிவித்த புகைப்படம் மில்லியன் பார்வையாளர்களின் மனதை வென்றுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியிருக்கும் சூழலில், தெருக்களில் விலங்கினங்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.


இந்நிலையில் சில சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து மாஸ்க் அணிந்தவாறு விலங்கினங்களுக்கு உணவு வழங்கினர்.

இதனிடைய காரில் பயணித்த நபர் ஒருவர் குரங்கிற்கு உணவு அளித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


அதில், காரில் பயணித்த நபர் ஒருவர் ஆரஞ்சு பழம் ஒன்றை குரங்கிற்கு அளிக்க அதனை பெற்றுக்கொண்ட குரங்கு புன்னகையை நன்றியாக தெரிவிக்கின்றது. குரங்கின் இந்த செயல் இணையத்தில் பலரின் மனங்களை வென்று வருகின்றது.