நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் கவர்ச்சியான ஹீரோயினாக டாப் லிஸ்ட் நடிகையாக இருந்தவர். ரஜினி, விஜய், தனுஷ், விஷால் என பலருக்கு ஜோடியாக நடித்து வந்தவர். பின் படங்கள் வாய்ப்பும் அவருக்கு பெரிதாக அமையவில்லை.
தெலுங்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். பின் ரஷ்யா நாட்டை சேர்ந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து உதவி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா கொரோனா நிதி திரட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் அவர் வயதானவர்கள், முதியவர்கள், நாள் கூலி பணியாளர்கள், வீடுகளை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக கொரோனா மூலம் நிதி திரட்டப்படுகிறது.
இதற்காக ஒவ்வொருவரும் ரூ 200 அனுப்பி வையுங்கள். மேலும் பணம் அனுப்பியவர்கள் ரசீதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சம்மந்த இமெயிலுக்கு அனுப்ப வேண்டும். நிதி வழங்கியவர்களில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அவர்கள் ஸ்ரேயாவுடன் நடனமாடலாம், யோகா பயிற்சிகள் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.