நடிகை ரம்பா, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், உழவன் படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானாலும் ஹீரோயினாக நடித்தது, கார்த்திக்கின் உள்ளைத்தை அள்ளித்தா படத்தில் தான்.
அர்ஜுனின் செங்கோட்டை, சுந்தர புருஷன், ரஜினியின் அருணாச்சலம், அஜித்தின் ராசி, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா.
கடைசியாக பெண்சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் கனடாவைச் சேர்ந்த இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட இந்திரகுமார் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திவிட்ட அவர், கனடாவில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா, சாஷா என்ற மகள்களும் ஷிவின் என்ற மகனும் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 11ம் திகதி, தனது திருமண நாளைச் சிறப்பாகக் கொண்டாடும் ரம்பா, கடந்த சில நாட்களுக்கு முன் எளிமையாகக் கொண்டாடினார்.
இந்நிலையில் இவர் தனது ஃபேமிலி போட்டோவை இன்ஸ்டாகிராமில் நேற்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் கமென்ட் போட்டுள்ளனர். சிலர், நீங்க மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு ரசிகை, நீங்க ஏன், ‘கனடா தெலுங்கு’ நிகழ்ச்சிகளுக்கு வர்றதே இல்லை? என்று விசாரித்துள்ளார்.
இன்னொரு ரசிகர், ‘இங்க முடியல.. கனடாவுல லாக்டவுன் எப்படியிருக்கு..? என்று கேட்டுள்ளனர். ‘சூப்பர் ஃபேமிலி போட்டோ.. எல்லாரும் அழகா இருக்கீங்க’ என்று கூறியுள்ள சிலர், ‘ஏன் பழைய எனர்ஜியை முகத்துல பார்க்க முடியலை, ரம்பா?’ என்றும் கேட்டுள்ளனர். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
View this post on Instagram
Family?? #familytimes #preciousmoments #spendingtimetogether #staysafeeveryone #stayathome







