ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் கரோனா தாக்கம் குறைவு…

இந்த உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ளது. உலகின் சுமார் 210 நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கமானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீன நாட்டின் யூகான் நகரில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்தால், மக்களின் இயல்பு வாழ்க்கையானது திரும்பியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கரோனாவின் உச்சகட்ட தாக்குதல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் கடுமையான அளவு இருக்கும் நிலையில், ஸ்பெயின் போன்ற நாடுகளில் சற்று குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,220,346 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 228,236 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 1,000,355 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், இத்தாலி நாட்டில் கரோனா வைரசால் 236,899 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 453 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 24,275 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரசால் 203,591 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 323 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 27,682 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கரோனா வைரசால் 166,420 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 427 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 24,087 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரசால் 165,221 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 795 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 26,097 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் கரோனா வைரசால் 79,361 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 448 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 5,511 ஆக உயர்ந்துள்ளது.