வடகொரியாவிற்கு இருக்கும் உண்மையான ஆபத்து இது தான்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சமீபத்தில் பார்க்கவில்லை, இருப்பினும் நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமெரிக்க வெளியுறவு துறை செயலர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் அமெரிக்கா, சீனா, வடகொரியா என பல நாடுகள் மீதும் தன் கண்ணை வைத்து வருகிறது.

ஏனெனில் அணு ஆயுதத்தில் சிறந்த நாடு வடகொரியா அந்நாட்டு அதிபரை கடந்த சில தினங்களாக பார்க்க முடியவில்லை, அதே போன்று வைரஸை பரப்பிவிட்டு விட்டு, சீனா தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

இதனால் இந்த இரண்டு நாடுகளின் நடவடிக்கையும் அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது.

இந்நிலையில் கிம் பற்றி கடந்த சில தினங்களாக வரும் செய்தி குறித்து அமெரிக்க வெளியுறவு துறை செயலர் Mike Pompeo-விடம் கடந்த புதன் கிழமை பாக்ஸ் நியூஸ் கேட்ட போது, நாங்கள் அவரை சமீபத்தில் பார்க்கவில்லை, அணுசக்தி மையமாக்கும் எங்களின் பணியில் வடகொரியாக உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், ஆனால் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் வடகொரியா கொரோனா வைரஸ் அல்லது பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு, உணவுபற்றாக் குறை ஏற்படும் ஆபத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 1990-களில் வடகொரியாவில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.