அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மற்றும் Texas Intruments என்பன இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு இடையில் போட்டிய ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளன.
இப் போட்டியானது கணினி செய்நிரல் உருவாக்கும் போட்டியாக காணப்படுகின்றது.
இப் போட்டியில் மத்திய மற்றும் உயர் நிலை பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ள முடியும்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மனிதர்களின் ஈடுபாடு ஆரம்பித்து 20வது வருடங்கள் நிறைவுபெறுவதை நாசா கொண்டாடுகின்றது.
எனவே இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் குறித்த போட்டி அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாணவர்கள் ஐந்து பேர் சேர்ந்து ஒரு குழுவாக பங்குபற்ற முடியும்.
அத்துடன் தமது திட்டங்களுக்கான முன்மொழிவுகளையும் ஒன்லைன் ஊடாக வழங்க முடியும்.
பொதுமக்களின் வாக்களிப்பு மூலம தெரிவு செய்யப்படும் ஐந்து குழுக்கள் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் Johnson Space Center இற்கு விஜயம் செய்யும் வாய்ப்பினையும் பெறவுள்ளனர்.