இரவு பகல் பாராமல் கொரோனா பணி! காதல் ஜோடிக்கு குவியும் அன்பு மழை

அமெரிக்காவில் இரவு பகல் பாராமல் கொரோனா வார்டில் பணி செய்து வரும் காதல் தம்பதியின் ரொமான்ஸ் படம் வைரலாகிவருகிறது.

கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள், நர்சுகள், பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த காதல் தம்பதியின் புகைப்படம் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

அப்படத்தில் இருப்பவர்கள் மைன்டி பிராக் மற்றும் பென் கேயர், இருவரும் நர்சிங் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

இந்த தம்பதிகள் தற்போது ஒரே மருத்துவமனையில் சுகாதாரத் துறை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

எப்போதாவது வீட்டுக்கு செல்லும் இத்தம்பதியினர் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து இந்த தம்பதிகள் கூறும்போது, ’நாங்கள் பெரிதாக எதையும் செய்யவில்லை. நாட்டு மக்களுக்காக நாங்கள் படித்த படிப்பை பயன்படுத்துகிறோம்.

இடையிடையே எங்கள் காதலையும் புதுப்பித்துக் கொள்கிறோம் என்றும் காதல் என்பது நம்பிக்கையின் சின்னம்தானே என்று நெகிழ்கின்றனர்