விண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

விண்டோஸ் 10 இயங்குதளத்தின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டதன் பின்னர் இவ் இயங்குளதத்தின் பழைய பதிப்புக்களுக்கான பாதுகாப்பு உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த பதிப்புக்களுக்கு மீண்டும் பாதுகாப்பு உதவிகளை வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு பயனர்கள் இச் சலுகையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த தகவலை மைக்ரொசொப்ட் நிறுவனமே உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன்படி விண்டோஸ் 10 இயங்குதளத்தின் 1709 (Enterprise, Education, IoT Enterprise) பதிப்புக்களுக்கு பாதுகாப்பு உதவி வழங்கப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.