இன்ஸ்டாகிராமில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருபவர்கள் அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் தான்.

இவர்களின் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கும் என்பதனை நாம் அறிவோம்.

இந்நிலையில் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே இதில் யார் நம்பர் 1, நம்பர் 2 என்ற போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது பிரபல சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் இதுவரை பயன்படுத்தப்பட்ட நடிகர்களின் பெயர் பட்டியலில் தனுஷ் 3ஆம் இடமும், அஜித் 2ஆம் இடமும், விஜய் முதல் இடத்தையும் பிடித்துள்ளனர்.

தற்போது இந்த விஷயத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.