தனது தீவிர ரசிகரான 22 இளைஞரைக் காதலித்த 52 வயது தாய்…. கால்பந்து வீரர் கூறியது என்ன?

கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர், தனது தாயார் 22 வயது வாலிபருடன் கொண்டுள்ள காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் நெய்மர். இவரின் தந்தை வாக்னர் ரிபெய்ரே மற்றும் தாயார் நடின் கான்கேல்வ்ஸ்(52) ஆகிய இருவரும் கடந்த 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.

தந்தை வாக்னர் ரிபெய்ரே மகன் நெய்மரின் மேனேஜராக செயல்பட்டு வரும் நிலையில், நெய்மரின் தாயாருக்கும் அவரது தீவிர ரசிகரான 22 வயது இளைஞருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையல், இருவரும் அரவணைத்து நிற்பது போன்ற படத்தை நெய்மரின் தாயார் நடின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து நெய்மர் ஏதும் கூறாமல் இருந்த நிலையில், தற்போது அந்த படத்திற்கு ‘மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா…. நான் உங்களை விரும்புகிறேன்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.