அமெரிக்கா, ஐரோப்பாவை அலறவிடும் சோகம்.!!

சீன நாட்டின் ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகரில் துவங்கிய கரோனா வைரஸின் பாதிப்பானது மிகவும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினமும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இறந்து வருகின்றனர். தினமும் ஏற்படும் உயிரிழப்புகள் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய பல மருத்துவ வசதிகளை கொண்ட மேலை நாடுகளும் கரோனாவின் தாக்கத்தில் சிக்கி பெரும் உயிரிழப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் உலகளவில் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கத்திற்கு 532,879 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 1,830 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 20,577 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகிலேயே கரோனாவால் அதிகளவு பலி எண்ணிக்கையை கொண்ட நாடுகளில் அமெரிக்கா இத்தாலியை பின்னுக்கு தள்ளி முன்னே வந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் 163,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று 525 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 16,606 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலி நாட்டில் 152,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 619 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 19,468 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 129,654 பேர் பாதிக்கப்பட்டு, நேற்று ஒரேநாளில் 635 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 13,832 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஐக்கிய நாடுகளில் 78,991 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 917 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 9,875 ஆக அதிகரித்துள்ளது.