பிரபல தொலைக்காட்சி சேனலில் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். கடந்த வருடம் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமனாவர் தான் இலங்கை தமிழ் பெண் லாஸ்லியா. தமிழ் ரசிகர்களின் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தினை நடிகர் கவின் மூலமும் பெற்றார்.
பிக்பாஸில் கவின் மீது இருந்த காதலால் பல சர்ச்சைக்குறிய வதந்திகளுக்கு ஆளானார் லாஸ்லியா. அதன்பின் இருவரும் தங்கள் வேலைகளை பார்த்து வருகிறார்கள். பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் சமீபகாலத்திற்கு முன் லாஸ்லியாவின் பெயரை கொண்ட ஆபாச வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. இது நான் கிடையாது பொய்யான தகவல் என்று அவரின் ரசிகர்களே கூறி வந்தனர். இதைதொடர்ந்து இதை கேள்விப்பட்டு லாஸ்லியா பதிலடி கொடுத்து ஒரு பதிவிட்டுள்ளார்.
இந்த வதந்தியான வீடியோவிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா தற்போது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்தவதந்தியில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நிலைக்கு வந்துட்டாங்க தலைவி என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள்.







