தடையை மீறி ஆண் நண்பருடன் சொகுசு காரில் வலம் வந்த நடிகை விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
கன்னடத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு சஜ்னி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷர்மிளா மந்த்ரே.
20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர், தமிழில் மிரட்டல் படத்தின் மூலம் 2012ல் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால் தமிழில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் கன்னட படங்களிலேயே நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இரவு ஆண் நண்பருடன் சொகுசு காரில் வெளியே சென்றுள்ளார்.
அப்போது அதிகாலை 3 மணியளவில் பெங்களூரு வசந்த் நகர் ரயில்வே பாலத்தில் நிலைதடுமாறி கார் விபத்துக்குள்ளானது.
இதில் ஷர்மிளாவின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்ல கர்நாடகா காவல்துறையிடமிருந்து ஷர்மிளா பாஸ் பெற்றிருந்த நிலையில், ஆண் நண்பருடன் ஊர் சுற்றியது தெரியவந்துள்ளது.
எனவே அனுமதி பாஸை தேவையின்றி பயன்படுத்தியதாக பொலிசார் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர் கன்னட சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான ஆர்.என்.மந்த்ரேவின் பேத்தி ஆவார்.







