ஊரடங்கை மீறி ஆண் நண்பருடன் காரில் சுற்றிய நடிகை..

சீனாவில் ஆரம்பித்த கொரானா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையும் தன்னுள் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் அந்தந்த நாடுகளும் நோயினை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்கு தனிமைப்படுத்துதல் தான் இதற்கான மருந்து என்று பல நாடுகளில் யாரும் வெளியில் செல்லாத வண்ணம் 144 தடை உத்திரவினை அமல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கடந்த 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கை பின்பற்றி வருகிறது. பல நடவடிக்கைகளை நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் நிலையில் சிலர் இதனை மீறி வெளியில் சுற்றி வருகிறார்கள். இதனையும் கட்டுப்படுத்த போலிசார் வெளியில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கன்னட சினிமாவில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகை ஷர்மிளா மந்த்ரே. பெங்களூருவில் வசித்து வரும் ஷர்மிளா ஊரடங்கை மீறி தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் சுற்றியுள்ளார். அப்போது திடீரென பெங்களூர் ஹைகிரண்ட் காவல் நிலையத்தை தாண்டி இருக்கும் வசந்த் நகர் எனும் இடத்தின் இருந்த பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

காரினை அவரது நண்பர் லோகேஷ் ஓட்டி வந்ததால் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காரின் முன்பகுதி சீட்டில் உட்கார்ந்திருந்த ஷர்மிளாவிற்கு முகத்திலும், கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த போலிசார் விபத்து காரணமாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு விசாரித்து வருகிறார்கள்.