நடிகர் விஜய்க்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக கொடுத்த 12 வயது சிறுவன்..!!

விஜய் தமிழ சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க பல லட்ச ரசிகர்கள் காத்திருக்கினர். இந்நிலையில் விஜய்க்கு 6லிருந்து 60வரை ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தற்போது 12 வயது சிறுவன் ஒருவன் நீச்சல் போட்டியில் ஜெயித்து கொஞ்சம் பணம் வைத்துள்ளார்.

அதை விஜய்யை நேரில் பார்க்க பயன்படுத்தலாம் என நினைத்திருந்த நிலையில், கொரோனா நிதிக்காக கொடுத்துவிட்டாராம். இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த செயல் கண்டிப்பாக தளபதி விஜய் கவனத்திற்கு சென்று கொரோனா பிரச்சனைகள் முடிந்ததும் அவரே அழைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.