பெண்களே மாதவிடாய் தள்ளி போகுதா? இதுதான் காரணம்

“எனக்கு 2 மாசத்துக்கு ஒரு முறைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை நம் உடம்புல ஏதாவது பிரச்னை இருக்குமோ?”

“ஒவ்வொருத்தரோட உடல்நிலையைப் பொறுத்து, நாள் கணக்கு மாறலாம்னு படிச்சிருக்கேன்… ஆனா, எனக்குக் கண்டபடி மாறுதே…’’

இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் குறித்த ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்:

மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படும். இரண்டு, மூன்று மாதங்கள் இடைவெளியில் தோன்றாமல் மாதம் ஒரு முறை தோன்றுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. பெண் பல ஆண்டுகள் கழித்து கருக்கொள்ள, பருவமடைந்தலிருந்தே மாதம் ஒரு கரு முட்டை வெளியேறும். இது இயற்கை.

இத்தகைய பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்சினை இருக்காது. மாதவிடாய் ஏற்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண்ணின் உடல் தயாராவது மார்பக வளர்ச்சி மூலம் தெரியத் தொடங்கும்.

இந்த நேரத்தில்தான் பெற்றோர் மாதவிடாய் குறித்து குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். இத்தகைய மாறுதல்கள் இயல்பாகவே ஏற்படவில்லையென்றால் கால தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

முதல் முறை மாதவிடாய் ஏற்பட்ட பின், இரண்டாவது சுழற்சி தள்ளிப் போகலாம். இதனால் பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனால், பொதுவாக ஒவ்வொரு மாதமும் 21 நாளில் இருந்து 35 நாட்கள் இடைவெளிக்குள் வர மாதவிடாய் வர வேண்டும். இதில் மாறுபாடு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். பெண்கள் பூப்பெய்தும் காலம் 13 வயதிலிருந்து 14 வயது வரை இருக்கலாம்.

இயல்பான மாதவிடாய் சுழற்சி ஏற்பட சத்துள்ள உணவுகள் சாப்பிட வேண்டும். உடல்பருமன் ஏற்படாமல் இருக்க ஓடியாடி விளையாட வேண்டும். அன்றாட உடற்பயிற்சி மிக அவசியம். சிலருக்கு உடல் பருமனால் முதல் மாதவிடாய் முன்கூட்டியே வந்துவிடும். சிலருக்குக் கால தாமதம் ஆகும். இதையெல்லாம் சரி செய்ய உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறையிடம், மாதவிடாய் பற்றிய பெரிய விவாதமே நடந்துவருகிறது. மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று சில பேர்களின் கருத்துகளை ஒதுக்கி, அது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.

ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னைகளின் ஒன்றாக உள்ளது.

பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது போன்றவைகளும் பிரச்னையை சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பிரச்னைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்’ என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைக் கவனிக்காவிட்டால், பெண்களுக்குக் கருத்தரிப்பதில் பல பிரச்சினை ஏற்படும்.

குழந்தையின்மைக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதுதான் மிக முக்கியமான விஷயம். பெரும்பாலும் பருவம் எய்திய பெண்களுக்கு, முதல் சில மாதங்களுக்கு இந்தப் பிரச்னை தொடரும். ஆனால், தொடர்ந்து மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், அது பிரச்னையை உருவாக்கு. உடற்பருமனாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இவர்கள், உடல் எடை குறைப்பதன் மூலம் இதை சரி செய்யலாம்.

தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருக்கும்போது, மாதவிடாய் கால சுழற்சியில் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாதவிடாய்ப் பிரச்னை மட்டுமன்றி உடல் எடை சட்டென அதிகரிக்கும். வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை இது பெரிதும் பாதிக்கும். இதனால், உடலின் செயல்பாடுகள் யாவும் குறைந்து, உடல் சோர்வடையும். மாதவிடாய்ச் சுழற்சி மட்டுமன்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதய பாதிப்புகளும் ஏற்படும்.

புரொஜெஸ்ட்ரான் (Progesterone), ஈஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற மாதவிடாய்க்கு உதவும் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்பட்டால் மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்தும்.

பெண்களுக்கு `மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய்ச் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இதன் (Perimenopause) காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.”

மாதவிடாயை சரிசெய்து கொள்ள

  • அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிட கூடாது. இதனால் உடல் கோளாறுகள் ஏற்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும்.
  • அதிக மன அழுத்தம் இருக்க கூடாது. இது கருமுட்டை உற்பத்தியை பாதிக்கும்.
  • உடற்பயிற்சி, நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ள வேண்டும். பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.
  • ஒரு நாளைக்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.