பிரபல செய்தி வாசிப்பாளரை மனவருத்தமடைய வைத்த செயல்!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் செய்தி வாசிப்பாளராக முகம் காட்டி பிரபலமானவர் அனிதா சம்பத்.

இப்படம் அவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை உண்டாக்கியது. அதன் பின் அவரின் லெவலே வேறு என்று சொல்லுமளவுக்கு அவரின் லைஃப் ஸ்டைல் மாறியது.

டிவி சானலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அவர் தற்போது எமெர்ஜென்சி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

தற்போது லாக்டவுன் காலத்திலும் யூடுயூபில் புதுவிதமாக வீடியோக்கள் செய்து வெளியிட்டு வரும் அவர் தற்போது “உலகமே lockdown இல் இருக்கும் போது, ஊடக வியலாளர்கள் உயிரை பொருட் படுத்தாமல் நாங்கள் தினமும் வேலைக்கு செல்கிறோம்.

எங்களை போற்றவில்லை என்றாலும், தூற்ற வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.