இதுவரை யாரும் செய்யாத உதவியைச் செய்த மஞ்சு வாரியர்..

கொரோனா வைரஸ் அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மக்கள் அதிகம் கூடுவதை முற்றிலுமாக தடை செய்துள்ளனர். அனைத்து தொழில்களும் இந்த கொரோனா வைரசால் நின்றுபோய் உள்ளது. இதனால் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

அதே போல சினிமா தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், டெக்னீஷியன்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் ஒப்பந்த கலைஞர் ஒருவர் மூலமாக திருநங்கைகள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிர்த்து வருவதை அறிந்து ரூபாய் 35 ஆயிரம் கொடுத்து நிதி உதவி செய்துள்ளார்.