பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!

ஈராக்கில் சிக்கி தவிக்கும் பிரித்தானியர்களை திருப்பி அனுப்ப சாத்தியமான வழியை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் கொரோனா வைரஸ்க்கு 40 பேர் பலியாகியுள்ள நிலையில், 458 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈராக் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏப்ரல் 15ம் திகதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் விமானங்களை நிறுத்துவதற்கு முன்பு வெளியேற முடியாத ஈராக்கிற்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானியா குடிமக்களை, திருப்பி அனுப்ப சாத்தியமான வழியை கண்டறியும் பணியல் ஈடுபட்டு வருகிறோம்.

அவசரமாக பிரித்தானியாவிற்கு திரும்ப வேண்டும் என்றால் மார்ச் 30ம் திகதிக்குள் baghdad.consular@fco.gov.uk என்ற மின்னஞ்சலுக்கு விவரங்களை அனுப்புமாறு ஈராக்கில் உள்ள பிரித்தானியா தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு திரும்ப வாய்ப்பு கிடைக்கும்போது எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.