கடந்த சில மாதங்கள் உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பலருக்கும் உயிர் பாதிப்பையும், உடல் நலக்குறைவையும் ஏற்படுத்தி வருகிறது.
மக்கள் குறைந்தது 1 மீட்டர் இடைவெளியாவது விட்டு விலகி இருக்க வேண்டும், கூட்டம் போடக்கூடாது, வெளியேறு சென்று வந்தால் கைகளை கழுவி சுத்தம் செய்யவேண்டும் என தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே மாஸ் அணிந்த படி தன் காதலருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.
நாடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் இப்படியான புகைப்படம் தேவையா என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
பூனம் பாண்டே Nasha, The Journey of Karma என ஹிந்தி படங்கள், Malini & Co என்ற தெலுங்கு படத்திலும் கிளாமராக நடித்துள்ளார். Love Is Poison என்ற கன்னட படத்தின் பாடலிலும், Aa Gaya Hero என்ற ஹிந்தி பட பாடலிலும் நடித்துள்ளார்.







